Skip to content

பஞ்சாகமம்

00:00
00:00
  • பஞ்சாகமம் அறிமுகம் 00:00
  • ஆதியாகமம் 00:00
  • யாத்திராகமம் 00:00
  • லேவியராகமம் 00:00
  • எண்ணாகமம் 00:00
  • உபாகமம் 00:00

பொருளடக்கம்

பஞ்சாகமம் ஓர் அறிமுகம்

மனிதர்கள் தங்களுக்குள் நிலவும் காரியங்களைக் குறித்து உடன்படிக்கை (Agreement) செய்துகொள்வது வழக்கம். அதுபோலவே வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய, சர்வல்லவரான தேவன் மனிதர்களோடு செய்து கொண்டிருக்கும் உடன்படிக்கையே (Covenant) `ஏற்பாடு’ என்று அழைக்கப்படுகிறது.

நமது பரிசுத்த வேதாகமம் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்ற இரண்டு ஏற்பாடுகளால் அல்லது உடன்படிக்கைகளால் ஆனது. யெகோவா என்னும் நாமத்தில் வெளிப்பட்ட தேவன் இஸ்ரவேலருடன் செய்துகொண்ட உடன்படிக்கை `பழைய ஏற்பாடு’ எனவும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தில் வெளிப்பட்டு மனிதகுலத்துடன் செய்த உடன்படிக்கையே `புதிய ஏற்பாடு’ எனவும் அழைக்கப்படுகிறது.

வேதாகம வரலாறு
வேதாகமம் என்பது ஒரே புத்தகமாக இருந்தாலும் அது பல புத்தகங்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப் புத்தகங்கள் பரிசுத்த ஆவியினால் உந்தப்பட்டு 40 எழுத்தாளர்களால் எழுதப்பட்டன. மேலும் 60 தலைமுறைகளை உள்ளடக்கிய சுமார் 1600 வருட கால இடைவேளையில் வாழ்ந்தவர்கள் மூலம் கிரேக்க, எபிரேய, லத்தீன் போன்ற மொழிகளில் எழுதப்பட்டது.

வேதாகமத்தின் கடைசி எழுத்தாளர் 1900 வருடங்களுக்கு முன்பு மரித்தார். பல எழுத்தாளர்கள், ஒருவரையொருவர் சந்தித்தது கிடையாது. அவர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்தார்கள் வேதாகமத்தின் எழுத்தாளர்கள் பலர் தங்களுக்குள் நூற்றுக்கணக்கான வருடங்கள் இடைவெளியில் வாழ்ந்தார்கள். எனவே எதையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டிருக்க வாய்ப்பு இல்லை என்றாலும் எழுத்துக்களில் உள்ள ஒருமை எழுத்தாளர் ஒருவரே என்பதை புலப்படுத்துகிறது.

ஆதியாகமம் முதல் உபாகமம் முடிய முதல் ஐந்து நூல்களை நியாயப்பிரமாணம் என்றே பொருள்படும் தோரா (“Torah”)என்றழைக்கப்படுகிறது. இது ஐந்தாகமங்கள் அல்லது பஞ்சாகமம் என்று அழைக்கப்படுகிறது.
யோசுவா முதல் எஸ்தர் வரையுள்ள 12 நூல்கள் வரலாற்று நூல்கள் என்றும் யோபு முதல் உன்னதப்பாட்டு வரையுள்ள 5 நூல்கள் கவிதை அல்லது பாட்டு நூல்கள் என்றும், ஏசாயா முதல் தானியேல் முடிய 5 நூல்கள் பெரிய தீர்க்கதரிசிகளின் நூல்கள் என்றும் ஓசியா முதல் மல்கியா வரை 12 நூல்கள் சிறிய தீர்க்கதரிசிகள் நூல்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

பழைய ஏற்பாடு
யூதர்கள் பழைய ஏற்பாடு என்று கூறுவதில்லை. மாறாக வேதவாக்கியம் என்றே அழைப்பார்கள். (அப் 17:11) மேலும் TANAKH எனவும் அழைப்பதுண்டு. யூதர்களின் TANAKH நாளாகமத்தில் நிறைவடைகிறது.
TORAH என்றால்,
T – TORAH- மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகம்
N – NEVIIM – தீர்க்கதரிசன புஸ்தகம்
K – KETUVIIM – எழுத்துக்கள்
இதனை இயேசுவே குறிப்பிடும்போது லூக்கா 24:44ல் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், தீர்க்கதரிசிகளின் ஆகமத்திலும், சங்கீதங்களிலும் என்று TANAKH குறித்து கூறுவதைப் பார்க்கலாம்.
TANAKH – ஐ கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தியுள்ளனர்:

TORAH
1. ஆதியாகமம்
2. யாத்திராகமம்
3. லேவியராகமம்
4. எண்ணாகமம்
5. உபாகமம்

NEVIIM
1. யோசுவா
2. நியாயாதிபதிகள்
3. சாமுவேல் ( 1, 2 சாமுவேல் ஒரே புத்தகம் )
4. இராஜாக்கம் ( 1, 2 இராஜாக்கள் ஒரே புத்தகம் )
5. ஏசாயா
6. எரேமியா
7. எசேக்கியேல்
8. ஓசியா
9. யோவேல்
10. ஆபோஸ்
11. ஒபதியா
12. யோனா
13. மீகா
14. நாகூம்
15. ஆபகூக்
16. செப்பனியா
17. ஆகாய்
18. சகரியா
19. மல்கியா

KETUVIIM
1. சங்கீதம்
2. யோபு
3. நீதிமொழிகள்
4. ரூத்
5. உன்னதப்பாட்டு
6. பிரசங்கி
7. புலம்பல்
8. எஸ்தர்
9. தானியேல்
10. எஸ்றா, நெகேமியா (ஒரே புஸ்தகம்)
11. நாளாகமம் (ஒரே புஸ்தகம்)

பழைய ஏற்பாட்டின் புத்தகங்கள் – 39
பஞ்சாகமம் – 5
சரித்திரம் – 12
பாட்டு – 5
பெரிய தீர்க்கதரிசிகள் – 5
சிறிய தீர்க்கதரிசிகள் – 12

1. பஞ்சாகமம் – 5
1 ) ஆதியாகமம் 2 ) யாத்திராகமம்
3 ) லேவியராகமம் 4 ) எண்ணாகமம் 5 ) உபாகமம்

2. சரித்திர ( வரலாற்று ) புத்தகம் – 12
1 ) யோசுவா 2 ) நியாயாதிபதிகள் 3) ரூத்
4 ) 1 சாமுவேல் 5 ) 2 சாமுவேல் 6) 1 இராஜாக்கள்
7 ) 2 இராஜாக்கள் 8 ) 1 நாளாகமம் 9) 2 நாளாகமம்
10 ) எஸ்றா 11 ) நெகேமியா 12 ) எஸ்தர்

3. பாட்டு ( கவிதை நூல் ) – 5
1 ) யோபு 2 ) சங்கீதம் 3 ) நீதிமொழிகள்
4 ) பிரசங்கி 5 ) உன்னதப்பாட்டு

4. பெரிய தீர்க்கதரிசிகள் – 5
1 ) ஏசாயா 2 ) எரேமியா 3 ) புலம்பல்
4 ) எசேக்கியேல் 5 ) தானியேல்

5. சிறிய தீர்க்கதரிசிகள் – 12
1 ) ஓசியா 2 ) யோவேல் 3 ) ஆமோஸ்
4 ) ஒபதியா 5 ) யோனா 6 ) மீகா
7 ) நாகூம் 8 ) ஆபகூக் 9 ) செப்பனியா
10 ) ஆகாய் 11 ) சகரியா 12 ) மல்கியா

பஞ்சாகமத்தைக் குறித்து சிந்திப்போம்
1. ஆதியாகமம் 2. யாத்திராகமம் 3. லேவியராகமம்
4. எண்ணாகமம் 5. உபாகமம்
சட்டங்கள், போதனை, கற்பிப்பது போன்றவை வினைச்சொற்களாகும். பஞ்சாகமம் எபிரேய மொழியில் தோரா என்பதற்கு போதனை சட்டங்கள் என்றும் கிரேக்க மொழியில் 5 சுருள் ( எஸ்றா 6:8 ) என்றும், மோசேயின் நியாயப்பிரமாணம் என்றும் சொல்லப்படுகிறது. பஞ்சாகமங்களை எழுதியவர் மோசே ஆவார்.

யார் இந்த மோசே?
மோசே என்றால் ஜலத்தினின்று எடுக்கப்பட்டவன் (யாத் 3:10)
மோசேயின் பெற்றோர் ( யாத் 6:20) அப்பா அம்ராம்… அம்மா யோகெபேத் ( அத்தை )
பாவ சந்தோஷத்தை வெறுத்து தேவ ஜனத்தோடு துன்பத்தை அனுபவித்தவர்
தன் ஜனத்தின்மேல் உள்ள வைராக்கியத்தினால் கொலைகாரர் ஆனார்.
உயிருக்கு பயந்து ஓடியவர்
சாந்தகுணம், வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர். (அதற்கு, தேவனே சாட்சி )
40 வருட ஊழியத்திற்கு 80 ஆண்டுகள் பயிற்சி எடுத்தவர்.
பேசவேண்டிய இடத்தில் அடித்தவர்

4100 வருடங்கள் நடந்த சம்பவத்தை தேவனோடு முகமுகமாக பேசி அறிந்துகொண்டு 5 புத்தகமாக
எழுதினார். 80 வருடம் பயிற்சி பெற்றதால் வெற்றிகரமாக ஊழியம் செய்தார். 4100 வருட சம்பவம் ஐந்து ஆகமங்களாகவும் இதில் 2286 ஆண்டுகால சம்பவம் ஆதியாகமம் என்ற புத்தகமாகவும் உள்ளது.
மோசே இரண்டுமுறை 40 நாட்கள் இரவும் பகலும் புசியாமலும் குடியாமலும் தேவனோடு சீனாய் மலையில் உபவாசித்து ஜெபிக்க தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அதுபோல நம்மையும் இக்காலத்தில் வடிவமைக்க ஒப்புக் கொடுப்போம். ஆமென்!

ஐந்து ஆகமங்களில் முதல் புத்தகமான ஆதியாகம புத்தகம் பற்றி படிப்போம்.

ஆதியாகமம்

பெயர் விளக்கம்

எபிரேய மொழியில் “பேரெஷித்” (Bereshith) கிரேக்க மொழியில் “ஆரம்பம்” என்றும் பொருளாகும். ஆதி என்றால் தொடக்கம் என்று பொருள். ஆதியாகமத்தை எழுதியவர் மோசே, எகிப்திய அரசரின் புதல்வியின் வளர்ப்பு மகன் மோசேதான் எழுதினார் என்பதற்கு ஆதாரங்கள் வேதப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மோசேதான் ஆதியாகம புத்தகத்தை எழுதினார் என்பதற்கு வேதப் புத்தகத்தில் கூறப்பட்ட ஆதாரங்கள்

1. உட்புற ஆதாரங்கள்
உபாகமம் 1 : 1,2 மோசே இஸ்ரவேலரை நோக்கிச் சொன்ன வசனங்கள், ஆண்டவராகிய இயேசுவே நேரடியாக உரைத்தது, மோசேயின் நியாயப்பிரமாணம் என்று எழுதப்பட்டுள்ளது. மத்தேயு 19 : 7,8; லூக்கா 2:22; மாற்கு 10:3,4; மாற்கு 12 :26; லூக்கா 20 :37; லூக்கா 24:27; யோவான் 5:45-47; யோவான் 7:19,23. எல்லா சுவிசேஷப் புத்தகங்களிலும் ஆதாரங்கள் எழுதப்பட்டுள்ளது.

2. பவுலின் சான்று
எபிரேயர் 9:19. மோசேயின் ஆசரிப்புக் கூடாரம் என்று கூறப்பட்டுள்ளது.

3. வெளிப்புறச்சான்றுகள் ( External Evidence)
எபிரேய பொருள்கள் மற்றும் தகவல்கள் உள்ளன. சீனாய் மலை கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் மற்றும் கேரளாவில் உள்ள பைபிள் அருங்காட்சியகம் போன்றவை வெளிப்புற சான்றுகளாகும்.

காலம் : 2286 ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளது. எழுதப்பட்ட காலம் கி.மு. 1659 – 1619.

ஆதியாகமம் எழுதப்பட்டதின் நோக்கம்
தேவன் ஒருகூட்ட ஜனத்தை தன்னை ஆராதிக்க எப்படி தெரிந்துகொண்டார் என்பதையும், எப்படி வழிநடத்தினார் என்பதையும் அறிந்து கொள்ளவும் ஆதியாகமம் எழுதப்பட்டது. ஆதியாகமம் 50 அதிகாரங்களையும் 1553 வசனங்களையும் உள்ளடக்கியது. 66 புத்தகங்களின் சம்பவங்கள் நடந்த காலத்தைவிட ஆதியாமகம் காலத்தின் சம்பவங்கள் நடந்த காலங்கள் அல்லது வருடங்கள் அதிகம். அதாவது 2286 வருடங்களில் நடந்த சம்பவங்கள் ஆதியாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. பல ஆரம்பங்களைக் கொண்ட புத்தகம் தான் `ஆதியாகமம்’.

ஆதியாகமத்திலுள்ள ஆரம்பங்கள்
பிரபஞ்சத்தின் ஆரம்பம்
பூலோகம், கீழ் உலகம், மேல் உலகம் போன்றவைகளின் ஆரம்பம்
உயிரினங்களின் ஆரம்பம்
மனிதகுலத்தின் ஆரம்பம்
திருமணத்தின் ஆரம்பம்
பாவத்தின் ஆரம்பம்
மரணத்தின் ஆரம்பம்
மொழிகளின் ஆரம்பம்
நாகரீகங்களின் ஆரம்பம்
குடும்பங்களின் ஆரம்பம்
பலிகளின் ஆரம்பம்
தேவனோடு உறவாடுதலின் ஆரம்பம்
உடன்படிக்கையின் ஆரம்பம்
வாக்குறுதிகளின் ஆரம்பம்
மொழிகளின் ஆரம்பம்

ஆதியாகமத்தில் படிக்கவேண்டிய 10 காரியங்கள்

1. கீடிநபடிதல்
ஆபிரகாம் கீழ்ப்படிந்ததால் – விசுவாசிகளின் தகப்பன் ஆனான். நோவா கீழ்ப்படிந்ததால் – தன் குடும்பத்தினருடன் (8 பேர்) அழிவிலிருந்து காக்கப்பட்டு, உத்தமன் என்று பெயர் பெற்றான் (2பேதுரு 2:5) கீழ்ப்படிந்து நீதியைப் பிரசங்கித்தான்.

கீழ்ப்படியாமை
ஆதாம் கீழ்ப்படியாததினால் – தேவசமூகம், ஏதேன் தோட்டத்தை விட்டுத் தள்ளப்படுதல், உலகத்தில் முதல் பாவம் பிரவேசித்தது.

இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமை : விளைவு – கானான் சென்று சேராமல் வழியிலேயே மடிந்தார்கள்.

2. தேவனோடு சஞ்சரித்தல்
ஏனோக்கு, நோவா – போன்றவர்கள் மனதை ஒருமனப்படுத்த தேவனோடு சஞ்சரித்தனர். அதனால் அவர்கள் முகம் பிரகாசித்தது. வாழ்க்கையும் ஆசீர்வாதமாய் அமைந்தது. இதைப்போல் நாமும் தேவனோடு சஞ்சரிக்கப்பழக வேண்டும்.

3. தீமைக்கு விலகுதல்
யோசேப்பு – பாலியல் பாவத்துக்கு ( தீமைக்கு ) விலகி ஓடினான். சோதோம், கொமோராவில் தீமை நடந்ததால் அழிக்கப்பட்டது. நம் தேவன் தீமையைப் பார்க்காத சுத்தக்கண்ணன். ஆபகூக் 2:13 முகமுகமாய் தரிசித்த மோசே
தீமை செய்தபோது (பேசவேண்டிய இடத்தில் அடித்ததால்) அவர்கூட தண்டிக்கப்பட்டார். எனவே நாமும் தீமைக்கு விலகியிருக்க வேண்டும்.

4. காத்திருத்தல்
ஆபிரகாம் 25 ஆண்டுகள் காத்திருந்தார்
யோசேப்பு 13 ஆண்டுகள் காத்திருந்தார்
நோவா 120 வருடங்கள் காத்திருந்தார்
யோபு பல மாதங்கள் காத்திருந்தார்
இவர்கள் எல்லோரும் பொறுமையுடனும், விசுவாசத்துடனும் காத்திருந்ததால் பல மடங்கு ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டனர். காத்திருந்து பெற்றுக்கொள்ளும் ஆசீர்வாதங்கள் நிலைத்திருக்கும். மட்டுமல்லாமல், தேவனுக்கு
மகிமையையும் கொண்டுவரும். ஊழியத்தில் தேவனுடைய நேரத்திற்காய் நாம் காத்திருக்க வேண்டும். தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான். தாவீது மென்மேலும் பலப்பட்டான். தேவனுடைய நேரத்திற்காய் காத்திருந்தால் ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம் வரும்.

5. கொடுத்தல்
முதல் காணிக்கை ஆபேல் கொடுத்தான். கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். (லூக்கா 6:38) மோசேயிடம் தேவனே காணிக்கை கேட்டு வாங்கச் சொன்னார். தசமபாகம், காணிக்கை ஊழியத்துக்குக்
கொடுப்பது, ஏழைக்கு உதவி செய்வது போன்றவை மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.

6. திருமண வாழ்வு
ஏவாள் கணவருக்கு கட்டுப்படாமல் சர்ப்பத்துடன் பேசியதால் பாவம் பிரவேசித்தது. சாராளோ ஆண்டவனே என்று கீழ்ப்படிந்ததால் பரிசுத்த ஜாதியைப் பெற்றாள். ஏசாவின் மனைவிகள் ஜீவனுள்ள தேவனை அறியாததினால்,
தாய் தகப்பன்மாருக்கு மனநோவாய் இருந்தார்கள். ஆதியாகமம் 26:32. மனைவி தன் கணவருடன் இணைந்து ஆலோசித்து முடிவுகள் எடுத்தால் நலமானது.

7. ஏமாற்றுதல்
யாக்கோபு என்றால் எத்தன் என்பது பொருளாகும். யாக்கோபு ஏமாற்றினான் ஆதியாகமம் 27:18, 19, 24. எனவே யாக்கோபையும் மாமனார் பலமுறை ஏமாற்றினார். ஏமாற்றும் குணம் நமக்குள் இருக்கக்கூடாது. பொய், ஏமாற்று,
சான்றிதழ் மோசடி, பணமோசடி இவையெல்லாம் நமக்குள் இருக்கக்கூடாது.

8. ஒழுக்கம்
பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது. ஒழுங்கின்மை இருக்கும் இடத்தில் வெறுமை உண்டாகிவிடும். தேவன் பூமியை ஒழுங்குபடுத்தி உயிரினங்களால் நிரப்பினார். ஆதியாகமம் 34:1 தீமை ஒழுங்கில்லை. தீனாள் ஒழுங்கற்று திரிந்தாள். யோசேப்பின் ஒழுங்கினால் உயர்வு வந்தது. லேவி, சிமியோன் ஒழுங்கற்று நடந்து கொலைகாரரானார்கள்.

9. அடங்கியிருத்தல்
சாராள் அடங்கி இராத காரணத்தால் ஆகார் மூலம் இஸ்மவேல் பிறந்தான். அவன் துஷ்டனாயிருப்பான். அவன் எல்லோருக்கும் விரோதமாயிருப்பான். (ஆதி 16:12) இன்றைய நாளளவும் வேதனை. ஆகார் ஏற்ற காலம்வரை
அடங்கியிருந்தாள். யோபு அடங்கி சேவித்தார். (யோபு 36:11, 12) அடங்கி சேவித்தால் நம் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களை செல்வ வாழ்வாகவும் போக்குவார்கள். நாமும் ஊழியத்திலும், நம் வாழ்க்கையின் எந்தக் காரியத்திலும் அவசரப்படக்கூடாது.

10. தேவன் நமக்கு தரும் வாய்ப்பை தவறாகப் பயன்படுத்தக் கூடாது
பொறுப்பை, அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஆதாம் ஏவாள் சரியாக பயன்படுத்தவில்லை. யோசேப்பு சரியானபடி பயன்படுத்தினதினால் உயர்த்தப்பட்டார்.

ஆதியாகமத்தின் மூலம் தகர்க்கப்பட்ட 7 தத்துவங்கள் or கோட்பாடுகள்

1. ஆதியிலே தேவன் – என்ற வார்த்தை, `கடவுள் இல்லை’ என்ற நார்த்தீகர்களின் தத்துவத்தை தகர்கிறது. (Atheist)
ஏலோகிம் – Creater (சிருஷ்டிகர் படைக்கிறவர் )
எபிரேய மொழியில் – திரியேக தேவன்
`ஏலோகீம்’ – என்ற வார்த்தை 2500க்கு மேல் வேதத்தில் சொல்லப்படுகிறது.
(உ) ஏல்-எல்-கீம் என்ற பதத்திற்கு கட்டுப்படுத்த முடியாத EL-OH-HIM-Supreme God கடவுள்.

2. `ஆதியிலே தேவன்’ என்ற பதம்
Monotheism – ஒரே ஒரு கடவுள் மட்டுமே உண்டு
என்பதையும் Polytheism – `பல தெய்வ வழிபாடு’ என்ற
கொள்கையையும் மறுக்கிறது. Our God is Universal God.

3. `ஆதியிலே தேவன்’ என்ற பதம் Mankind is the source of the World `மனிதகுலமே’ பிரபஞ்சத்திற்கு மையமானவன் என்ற கோட்பாட்டை மறுக்கிறது. மனுஷனே கடவுள் என்ற கோட்பாட்டைத் தகர்த்துவிட்டது.

4. தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். `சிருஷ்டித்தார்’ – என்ற சொல் – `விதிப்படிதான் எல்லாம் நடக்கிறது’ என்ற கோட்பாட்டைத் தகர்க்கிறது.

5. `சிருஷ்டித்தார்’ என்ற சொல் பரிணாமக் கொள்கையின் கோட்பாட்டை தகர்த்தது.

6. `சிருஷ்டித்தார்’ – என்ற சொல் ஏற்கனவே உலகம் இருந்தது என்ற கோட்பாட்டை தகர்த்தது.

7. `சிருஷ்டித்தார்’ – என்ற பதம் `இயற்கையே இறைவன்’ என்ற கொள்கையைத் தகர்த்தது. மனிதன் நெருப்பு, புயல், நீர், மழை, இடி, மின்னல் – இவற்றைக் கண்டு அஞ்சியதால், இவையெல்லாம் `கடவுள்’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் `பயப்படத்தக்கவர்’ தேவன் ஒருவரே. ஆமென்.

Our God is a maker and creator உண்டாக்கி உருவாக்குகிறவர்
Aw-Saw – Asha – தோட்டத்தை உண்டாக்கி ஆதி 2:8
2 ) Baw raw – தூசியிலிருந்து, மண்ணிலிருந்து மனிதனை உருவாக்கினார்.
ஆதி 2:7 – மனிதனை உருவாக்கி ஜீவசுவாசத்தை நாசியிலே ஊதி, ஜீவாத்துமாவாக்கினார். யோபு 33:6.

யாத்திராகமம்

பெயர் விளக்கம்
எழுதியவர் : மோசே, ஆதியாகமத்தின் தொடர்ச்சி யாத்திராகமம்

காலம் : கி.மு. 1445

அதிகாரம் : 40

வசனம் : 1213

விளக்கம் :
1. எபிரேய மொழி : ஷெமோத்
2. கிரேக்க மொழி : புறப்பட்டு போதல், விட்டுச் செல்லுதல்
காண்பிற்கும் தேசத்திற்கும், வாக்களிக்கும் இடத்திற்கும் – போதல் தாய்நாட்டிற்கு திரும்புதல்.
3. English : Exodus

இஸ்ரவேலர் 400 வருடம் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். இது திடீர் சம்பவம் அல்ல. தேவன் திட்டமிட்டது. ஆதி 15:11ல் ஆபிரகாம் பலி செலுத்தும்போது, அக்கினி வரவேண்டியது. ஆனால் பறவை வந்தது. ( தூக்கம், இருள், காரிருள் ) வருகிறது. மேலும் ஒரு சத்தம், 400 வருடம் அடிமைப்படுத்தப்படுவீர்கள் என்ற செய்தி. இதை வேதத்தில் இருண்ட காலம் (or) பின்மாற்ற காலம் என்று சொல்லப்படுகிறது. இது அடிமைத்தனம் என்றும் சொல்லலாம். பலியில் வந்த குறைபாடுகள் என்றும் சொல்லலாம்.

1. அசுத்தத்தோடு, பிரியமில்லாமல், கவனக்குறைவுடன் பலி செலுத்தக்கூடாது. பறவை அதாவது பிசாசு அசைவாடுவான். தேவையில்லாத காரியங்கள் நம் வாழ்க்கையில் ஏற்பட்டு, கவலை, கண்ணீர் உண்டாகும்.

2. பலி செலுத்தும்போது பரிசுத்தத்தோடு, உண்மையோடு அன்புடன் செலுத்தும்போது நமக்கு ஆசீர்வாதம் உண்டாகும். ஆமென்!

430 வருட கால அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி புறப்பட்டு செல்வதை யாத்திரை (or) யாத்திராகமம் என்று கூறப்படுகிறது. எமோரியரின் அக்கிரமம் மிகுதியானபடியால் இஸ்ரவேலர் அவர்களை அழித்து கானானுக்குள் செல்கின்றனர். ஆதியாகமம் 15:13ல் 400 வருடம் அடிமைகளாயிருப்பீர்கள் என்றும் யாத்திராகமத்தில் 430 வருடம் அடிமைத்தனம் என்றும் (யாக் 12:51) கூறப்பட்டுள்ளது. இதன் வித்தியாசம் 7.5 சதவீதம் ஆகும்.

ஆதி 47:28-ன்படி யாக்கோபு 17 வருடமும் யோசேப்பு 13 வருடமும் இஸ்ரவேலர் 400 வருடமும் எகிப்தில் இருந்தனர். ஆக மொத்தம் 430 வருட அடிமைத்தனத்திலிருந்து விடுதலையடைந்து எகிப்தை விட்டு கானானுக்குப் புறப்பட்டார்கள்.

யாத்திராகமம் ஒரு அற்புதத்தின் புத்தகம்
15 விதமான அற்புதங்கள் கானான் பயணத்தின் போது நடைபெற்றதால் இது ஒரு அற்புதத்தின் புத்தகம் என அழைக்கப்படுகிறது. அவையாவன:
1. தண்ணீரில் மிதக்க விடப்பட்ட குழந்தை
2. முட்செடியில் தேவன்
3. பாதையில் வாதை
4. பஸ்கா ஆசரிப்பு
5. செங்கடல் பிளப்பு
6. மேகத்தூண்
7. அக்னித்தூண்
8. பாறையில் தண்ணீர்
9. வனாந்திரத்தில் மன்னா
10. அமலேக்கியருடன் போர்
11. பத்துக் கட்டளை
12. மோசேக்குத் தேவன் தரிசனமாகுதல்
13. ஆசரிப்புக் கூடாரம் நிறுவப்படுதல்
14. பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற
முதல் மனிதன் (பெசலெயேல்)
15. ஒரே ஒரு யாத்திரை, ஒரு குடும்பம் ஒரு தேசமாய் மாறியது.
எனவே இது ஒரு அற்புதத்தின் புத்தகம் ஆகும்.
ஒரு யாத்திரை – ஒரு கதையாகலாம்
ஒரு யாத்திரை – ஒரு படமாகலாம்
ஒரு யாத்திரை – ஒரு புத்தகமாகலாம்
ஆனால் ஒரு தேசமாய் மாறியது.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
1. பழைய ஏற்பாட்டின் இரட்சகர் – மோசே
புதிய ஏற்பாட்டின் இரட்சகர் – இயேசு

2. ஆதியாகமம் முடிந்து 400 வருடம் கழித்து
யாத்திராகமம் எழுதப்பட்டது. மல்கியா எழுதப்பட்டு
400 வருடம் கழித்து – மத்தேயு எழுதப்பட்டது.

3. பழைய ஏற்பாட்டு பலிபொருள் – ஆட்டுக்கடா
புதிய ஏற்பாட்டு பலி – இயேசு கிறிஸ்து

யாத்திராகமத்தின் ஆசிரியர்
யாத்திராகமம் எழுதியது மோசே, ஆதியாகமத்தின் தொடர்ச்சிதான் யாத்திராகமம். யாத் 17:14, யாத் 24:12, மாற் 7:10 மோசே தான் எழுதினார் என்பதற்கு ஆதாரம்.
மோசே எகிப்து தேசத்தில் கற்றுக் கொண்டவைகள்தான் பஞ்சாகமங்கள் எழுதப் பயன்பட்டது.

யாத்திராகமம் நமக்கு உணர்த்துவது, அடிமைத்தனம், சிறையிருப்பு, என்னை பழக்குவிக்கும் இடமாகும். அடிமைத்தனம் இருக்கும்போது – ஒரு புறப்பாடு உண்டு.
எழுதப்பட்ட காலம் : 1445 B.C
அதிகாரம் : 40
வசனம் : 1213

யாத்திராகமத்தின் ஆய்வு ( தெரிந்துகொள்ள வேண்டியது )
1. யாக்கோபு – அவரது பிள்ளைகள் ( 70 பேர் )
2. பயங்கரமான ராஜா – பார்வோன்
3. ராஜாவின் ஆணை
4. மோசேயின் பிறப்பு
5. எரியும் முட்செடி
6. விடுதலை வீரர்
7. 10 வாதைகள்
8. செங்கடல்
9. மாரா
10. மன்னா
11. பொற்கன்றுக்குட்டி
12. உடன்படிக்கைப்பெட்டி
13. ஆசாரிப்புக் கூடாரம்
14. தலைமைத்துவம்

புறப்படும் முன்நடக்க வேண்டியது என்ன :
1. மீட்கப்படுதல் – யாக் 6:16 – விடுதலை சநடநயளந (எதிலிருந்து, ஏன் – மீட்பு )
சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்படுதல்.
மீட்கப்படாமல் புறப்பாடு இல்லை.
பாவத்திலிருந்து, வியாதி, கடன் பிரச்சனை சுபாவம் –
கோபம், சூழ்நிலை – இவற்றிலிருந்து மீட்பு. 1 கொரி 6:12 எல்லாம் தகுதியிராது. நான் எதற்கு அடிமை என்பதை அறிந்து அதிலிருந்து விடுதலை பெறவேண்டும்.

2. சந்திப்பு : மோசேயின் சந்திப்பு முட்செடி ( யாத் 3:14, 5:3)
Encounter with Go
மோசேயை தேவன் சந்தித்து `வா’ என்றார்.
ஆதி 12:1 ஆபிரகாமை சந்தித்த தேவன் நான் காண்பிக்கும் தேசத்துக்குப் போ என்றார்.
ஆதி 50:24 யோசேப்பு விசுவாசத்தோடு “தேவன் நம்மை சந்திப்பார்” என்றார். எனவே தேவன் நம்மையும் சந்திப்பார். சந்திப்பு நம்மை `யார்’ என்று அடையாளப்படுத்தும்.
பழைய வாழ்க்கைக்கு `திருப்புமுனை’யாக சந்திப்பு அமையவேண்டும்.
சந்திப்பு – மிக முக்கியம் (ஒருமுறைதான் நடக்கும்)
சஞ்சரிப்பு – பலமுறை என்னைக்கொண்டு என்ன நடக்கும் என்னைக் கொண்டு என்ன செய்யப் போகிறார் என்பதன் Blue Print கிடைக்கும்.

Common சந்திப்பு – திட்டத்தை தெளிவுபடுத்த (ஒருமுறை
மட்டுமே)

தினசரி சந்திப்பு – திட்டத்தை நிறைவேற்ற ஆதி 5:21, 22; ஆதி 12:1 ஆபிரகாமை 75 வயதில் சந்தித்தார்.
100 வருடம் தேவனோடு சஞ்சரித்தார். ஏனோக்கை 65 வயதில் சந்தித்தார். 300 வருடம் தேவனோடு சஞ்சரித்தார்.
Personal சந்திப்பில்லாவிடில் – தடம் புரண்டுவிடும்.
குறிப்பு : சந்திப்புக்குப் பின் சஞ்சரிப்பு அவசியம்

3. அடையாளம் ( யாத் 4:1 )
கோல் – பாம்பாக மாறினது முதல் அடையாளம்.
கை – குஷ்டமாய் மாறினது இரண்டாம் அடையாளம்.
குறிப்பு : தனிப்பட்ட முறையில் அடையாளம் தேவை.

4. சோதனை (யாத் 5:19) இக்கட்டு வந்தது
10 வாதை – 10 reasons
சோதனை – It is a part of Christian Life.
பாடு இல்லாத கிறிஸ்தவ வாழ்வே இல்லை. இயேசு பாடுபட்டுவிட்டார். நீ பாடுபட தேவையில்லை. அவர் நமது பாவம்போக்கிவிட்டார். ஆகவே நாம் பாவமன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று சிலர் சொல்லி மாற்றுகிறார்கள். நாம் பாடுகள் வழியாகத்தான் பரலோகம் செல்லமுடியும். சந்திப்பு, அடையாளம், மீட்பு, சோதனை இதனை ஒன்றன்பின் ஒன்றாகத் தாண்டினால்தான் கானான் (பரலோகம்) செல்ல முடியும்.

5. உடன்படிக்கை
யாத் 12:27 ஆட்டுக்குட்டியின் இரத்தம் – புது உடன்படிக்கையின் இரத்தம் நிலைக்காலில் பூசப்பட வேண்டும்.
பஸ்கா ஆசரிப்பு தான் உடன்படிக்கையின் அடையாளம்.
ஞானஸ்நானம் – நல்மனசாட்சியின் உடன்படிக்கை.
எனவே புதிய ஏற்பாட்டு விசுவாசிகள் இதனை கைக்கொள்ள வேண்டும்.

10 வாதைகளும் காரணங்களும்
1. கர்த்தர் தான் தெய்வம் என்பதை எகிப்தியர் அறிய
வேண்டும் என்பதற்கு யாத். 7:14.
2. எகிப்தின் தெய்வங்களுக்கு ஒரு நியாயத்தீர்ப்பு
கொண்டுவருவதற்கு யாத். 12:12.
3. இஸ்ரவேலரைக் கனப்படுத்த யாத். 8:22.
4. தேவ வல்லமை (or) புயம் வெளிப்பட யாத். 7:3ன்
படியாக வாதை உண்டானது.
5. பிற்கால சந்ததிக்கு ஒரு சாட்சியாக யாத் 10:1,2
இந்த வாதையை அனுப்பினார்.

சமாதான கோரிக்கைகள்
பார்வோன் – இஸ்ரவேலரிடம் வைத்த கோரிக்கைகள்
1. தேசத்தில்தானே பலியிடுங்கள் 8:25
2. வனாந்திரம் ரொம்ப தூரம் போக வேண்டாம் 8:28
3. புருஷர் மட்டும் செல்லுங்கள் 10:11
4. ஆடுமாடுகளை நிறுத்திவிட்டு செல்லுங்கள் 10:24

பத்து கட்டளைகளும் அதன் விளக்கங்களும்

10 கட்டளைகள் வியாக்கியானம்
1. கர்த்தரைத் தவிர வேறே தேவன் உண்டாயிருக்க வேண்டாம்1. முதலிடம் தேவனுக்கே Put God first
2. விக்கிரகத்தை வணங்க வேண்டாம். பயன்படுத்த வேண்டாம்2. Worship God Only தேவனை மட்டும் ஆராதிப்பேன்
3. தேவ நாமத்தை வீணிலே வழங்க வேண்டாம்3. Don’t use bad words வீண் வார்த்தை பேசாதே
4. ஓய்வுநாளை பரிசுத்தமாடீநு அனுசரிப்பாயாக4.Rest on 7th Day 7ஆம் நாள் ஓடீநுந்திரு
5. உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக5.Obey your Parents பெற்றோருக்கு கீடிநப்படி
6.கொலை செய்யாதிருப்பாயாக6.Harm No one எவருக்கும் தீங்கு செய்யாதே
7.விபச்சாரம் செய்யாதிருப்பாயாக7. Do not Cheat யாரையும் ஏமாற்றக் கூடாது
8. களவு செய்யாதிருப்பாயாக 8. Do not take others மற்றவர்களுடையதை எடுக்காதே
9. பொய் சாட்சி சொல்லாதிருப்பாயாக 9. Speak the truth மெய் பேசு
10. இச்சியாதிருப்பாயாக 10. Do not like others பிறருடையதை விரும்பாதே

நமது எண்ணங்களின் 3 செய்திகள்

1. விருப்பம் – தவறு அல்ல

2. ஆசை – துன்பத்துக்கு காரணமாகிவிடும்

3. இச்சை – பாவத்தை பிறப்பிக்கும்

கானான் யாத்திரையின் போது சந்தித்த முக்கியமான 5 இடங்கள்
கானான் யாத்திரை : 40 ஆண்டுகள்
கானான் to எகிப்து தூரம் : 847 KM
எண்ணிக்கை :சுமார் 30 லட்சம் பேர்
பெண்கள் + ஆண்கள் + குழந்தைகள்
ஆண்கள் மட்டும் : 6 லட்சம்

1. செங்கடல் – யாத் 14:14
கர்த்தர் உங்களுக்காய் யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் – வெற்றியின் இடம். சிவந்த சமுத்திரம் 1கொரி 10:2ல் ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.

2. சீனாய் மலை – மோசேயிடம் 10 கட்டளைகள் கொடுத்த இடம் :யாத் 19:18.
இது தேவப்பிரசன்னத்தைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகம் – கிறிஸ்தவ வாழ்க்கை வெற்றியுள்ளதாய் மாற மிகவும் முக்கியமானதாகும். 80 நாட்கள் சீனாய் மலையில் மோசே தங்கியது – மேல்வீட்டறையின் அனுபவத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது. (எண் 10:11; யாத் 34:1; யாத் 34:28,29; அப் 2:1-27)

3. பாரான் வனாந்திரம் : பாடுகளைக் குறிக்கிறது.
பாரான் பயணத்தின் ஒரு பங்கு எண். 14:23 – எந்த பாடுகள் வழியாகக் கடந்து விடுதலையடைந்தோமோ அந்தப் பாடுகள் திரும்ப வருமானால் அது பாரான் வனாந்திரம். இஸ்ரவேலர் இறைச்சி கேட்டு – கலகம் செய்கின்றனர். பரிசுத்த ஆவி பெற்றபின் சில பாடுகளை தேவன் அனுமதிப்பார். மிரியாம், கோராகு கலகம் பண்ணினார்கள். (சோதனைக்காலம் என்பது தேவன் நமக்கு அனுமதிப்பது – தேவனோடு கிட்டிச் சேரும்படியாக ).

கோராகு, மிரியாம் – தோல்வி அடைந்தனர். ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும். யோபு, யோசேப்பு, தானியேல், சாத்ராக், மேசாக், ஆபேத்நேகோ,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து – ஸ்தேவான், பவுல் – பாரான் வனாந்திரத்தை ஜெயித்தார்கள்.

தாவீது, ஆரோன், பேதுரு – பாரான் வனாந்திரத்தில் விழுந்து எழுந்தார்கள்.

ஆதாம், காயீன், சவுல், யூதாஸ், சிம்சோன், அனனியா, சப்பீராள் பாரான் வனாந்திரத்தில் விழுந்து அமிழ்ந்து போனார்கள்.

4. சீன் வனாந்திரம் : சீன் இது சாட்சியுள்ள வாழ்க்கையைக் குறிக்கிறது. மோசேயின் சாட்சி தேவனால் சொல்லப்படுகிறது. எண். 33:38 – ஆரோன் இதன் சமீபமான ஓர் மலையில் மரித்தார்.
உபா 2:14 – சீன் வனாந்திரம் வந்து சேரும்போது 38 வருஷமாயிற்று. காலேபும், யோசுவாவும் – மட்டும் தப்பினார்கள்.

5. யோர்தான் : இது மரணத்தைக் குறிக்கிறது. மரணப் போராட்டத்திற்குப்பின் வாக்களிக்கப்பட்ட தேசத்தில் பிரவேசித்தனர். மரண யோர்தானைக் கடந்தபின் – கில்கால் கானானுக்குள் பிரவேசித்தார்கள்.
கில்கால் – கடந்தபின் மன்னா நின்று போனது.
நிந்தை புரட்டிப் போடப்பட்ட இடம்.
யோசுவா 5:18, யோசு 5:11, 12, 13

இஸ்ரவேலர் அப்பங்களையும், சுட்ட கதிர்களையும் புசித்தார். யோசுவா 5:12. மன்னா நின்றது.
இதைப்போல் – நாமும் கானானுக்குள் நுழைய ஆயத்தமாவோம்.

ஆசரிப்புக் கூடாரம்

ஆசரிப்புக் கூடாரம் – 1. தேவன் மக்களை சந்திக்கும் இடம்.

வனாந்திரத்தில் நகரும் பரிசுத்த ஆலயம். நகரும் பரிசுத்த ஆலயம் (or) ஆசரிப்புக் கூடாரம்

1. பிரகாரம் 2. பரிசுத்தஸ்தலம் 3. மகா பரிசுத்த ஸ்தலம்
ஆகிய 3 பரிசுத்த ஸ்தலங்கள் அடங்கியதுதான் ஆசரிப்புக் கூடாரம்.

பிரகாரம்
100 முழ நீளமும் 50 முழ அகலமும் உள்ளதாய், தொங்குதிரைகளால் அடைக்கப்பட்ட ஒரு இடமாயிருந்து (யாத் 27:9-15). இந்தத் தொங்குதிரைகள் ஐந்து முழ உயரம் உள்ளவையாயிருந்தன. இவை அறுபது தூண்களில் நிலைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த இடமே பிரகாரம் எனப்பட்டது. ஆசரிப்புக் கூடாரத்தில் முன்புறம் இருக்கக்கூடிய, பிரகாரம். பிரகாரத்தின் முன்பகுதியில் வெண்கலத்தாலான பலிபீடம், தண்ணீர் தொட்டி அமைந்துள்ளது. ஒரு மனிதன் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் செல்லும்போது, தன் பாவத்திற்காய் பலிசெலுத்தப்பட வேண்டும். பின் தண்ணீரில் கழுவி பின் பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்ல வேண்டும்.

பரிசுத்த ஸ்தலம் வாசஸ்தலம் ஒரு திரைச்சீலையால் (ஏநடை) இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது (யாத் 26:33). இதனுடைய முந்தின பாகம் 20 முழ நீளமும் 10 முழ அகலமும் 10 முழ உயரமும் உள்ளதாக இருந்தது. இதற்குப் பரிசுத்த ஸ்தலம் என்று பெயர். பரிசுத்த ஸ்தலத்தில் பொன்குத்துவிளக்கு, சமுகத்தப்பம் வைக்கப்பட்ட மேசை, தூபபீடம் – போன்றவை வைக்கப்பட்டிருக்கும்.

மகா பரிசுத்த ஸ்தலம்
பரிசுத்த ஸ்தலத்தையடுத்த இரண்டாம் பாகமே மகா பரிசுத்த ஸ்தலம் என்னப்பட்டது. இது 10 முழ நீளமும் 10 முழ அகலமும் 10 முழ உயரமும் உள்ளதாய் இருந்தது. மகா பரிசுத்த தலத்தில் கேரூபீன்கள் கொண்ட கிருபாசனப் பெட்டி அல்லது உடன்படிக்கை பெட்டி அமைந்துள்ளது. அந்தப் பெட்டியினுள்
1. ஆரோனின் துளிர்த்தகோல்,
2. மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரம்,
3. 10 கற்பனைகள் கொண்ட பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஆசரிப்புக் கூடாரத்தின் பிரதிஷ்டை
1. ஆசரிப்புக் கூடாரம்
2. பணிமுட்டு சாமான்கள் ( குத்துவிளக்கு, மேஜை, தூபபீடம், கரண்டிகள் )
3. பிரதான ஆசாரியன்
4. பிரதான ஆசரியரின் குமாரர்கள் உட்பட எல்லாவற்றையும் தேவனுக்காய் பிரதிஷ்டை பண்ணினார்கள். அப்பொழுது தேவ மகிமை ஆசரிப்புக் கூடாரத்தை மூடிற்று.

யாத் 25:40 – ஆசரிப்புக் கூடாரம் எப்படி செய்யவேண்டும் என்று தேவன் மலையில் வைத்துப் போதித்தார். மலையில் உனக்குக் காண்பித்தபடியே செய்ய எச்சரிக்கையாயிரு என்றும் கட்டளையிட்டார். ஒரு தேவ மனிதன் பிரகாரத்தின் வழியாக, பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குச் செல்ல வேண்டும். மகா பரிசுத்த ஸ்தலத்தில்தான் தேவன் நம்மை சந்திப்பார். இது தேவன் பிரதான ஆசாரியனை சந்திக்கும் இடம், தேவன்,
இஸ்ரவேலர் தம்மைத் தொழுதுகொள்ள தெரிந்துகொண்ட ஒரு நடமாடும், நகரும் பரிசுத்த ஆலயமே இந்த ஆசரிப்புக் கூடாரம்.

லேவியராகமம்

முன்னுரை
லேவியர் மற்றும் ஆசாரியர்களுக்குரிய விதிமுறைகள் சொல்லப்பட்டதால் `லேவியராகமம்’ என்ற பெயர்பெற்றது. `ஆசாரியர்களின் வழிகாட்டி’ என்ற பெயரும் இதற்கு உண்டு.

அதிகாரங்கள் : 27

எழுதப்பட்ட காலம் : கி.மு. 1446

வசனங்கள் : 859

ஆசிரியர் : மோசே
56 முறை இந்த சட்டங்கள் மோசேக்கு தேவனால் கொடுக்கப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட `பரிசுத்தம்’ என்ற சொல் 87 முறை எழுதப்பட்டுள்ளது. பரிசுத்தத்திற்கு அடுத்த வார்த்தைகள் 133 முறை சொல்லப்பட்டிருக்கிறது.
பாவியான ஒரு மனிதன் எவ்வாறு தேவனை அணுக முடியும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் கருப்பொருள் ஆகும். தேவனுடைய நேரடியான வார்த்தைகள் அதிகம் இருப்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு ஆகும்.
“கர்த்தர் மோசேயை நோக்கி” என்று எழுதப்பட்டுள்ளதே இதன் வெகுசிறப்பு.

லேவியராகமத்தில் உள்ள 5 முக்கிய கருப்பொருட்கள்

1. பாவத்தைப் பற்றிய அறிவு அல்லது உணர்வுதான் தேவனோடுள்ள நம்முடைய உறவின் ஆரம்பம்.

2. கர்த்தர் மோசேயோடு பேசியதுபோல நம்மோடும், நம்மைக் கொண்டும் பேசமுடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

3. பாவ நிவர்த்தியின் மையம் இரத்தம். இரத்தம் சிந்துதல் இல்லாமல் “பாவமன்னிப்பு” இல்லை என்ற உண்மையை உணர்த்திய புத்தகம்.

4. கர்த்தரைப் போல் நாமும் பரிசுத்தமாய் வாழ முடியும் என்பதை உலகுக்கு வெளிப்படுத்திய புத்தகம்.

5. ஆசாரியர்கள், லேவியர் போன்றவர்களின் சட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள, எழுதப்பட்ட புத்தகம்.
பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் ஒரு புதிய ஏற்பாடு – ஏசாயா
புதிய ஏற்பாட்டு புத்தகத்தில் ஒரு பழைய ஏற்பாடு – எபிரெயர்

லேவியராகமமும் – எபிரெயரும்

லேவியராகமம் எபிரேயர்
1. மக்கள் ஆடு மாடுகளை (மூலம்) பலிசெலுத்தி மக்கள் தேவனோடும் தேவன் மக்களோடும் பேசினார்கள்.எபி 1:23ன்படி குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம், அவர் நாமத்தின் மூலம் விண்ணப்பங்களை ஏறெடுத்தார்கள்.
2. மத்தியஸ்தர் மோசே மத்தியஸ்தர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே.
3. பலிகள் முடிவில்லாமல் காலை, மாலை, மதியம் – என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும்.கிறிஸ்து இயேசு ஒரேமுறை கல்வாரி சிலுவையில் பலியிடப்பட்டார்.
4. பிரதான ஆசாரியன் ஒருநாள் மரித்துப் போனான். மரணத்திற்குட்பட்டவன்.இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்தார்.
5. பிரதான ஆசாரியன் முதலில் தன்னுடைய பாவத்திற்காடீநு பலி செலுத்த வேண்டிய பலவீனமான ஆசாரியன்.இரட்சிப்பின் அதிபதி தேவகுமாரன்
6. பழைய உடன்படிக்கை புதிய உடன்படிக்கை
7. கடைசித் தீர்வு ஆசரிப்புக் கூடாரம் கடைசித் தீர்வு பரலோக ராஜ்ஜியம்.
8. சந்தேகம், மரண பயத்துடன் ஆராதனை நடத்தப்பட்டது.தைரியத்துடன் கிருபாசனத்தண்டை சென்று ஆராதனை நடத்த இயன்றது.
9. சடங்காச்சாரங்கள் இருந்தது விசுவாச ஆராதனை இருந்தது.
10. பழைய ஆராதனை அழிந்து போனது.விசுவாச ஆராதனை நிலைத்து நிற்கக் கூடியது.

லேவியராகமத்தின் சுருக்கம்
பரிசுத்தம்
பலிகள்
பண்டிகைகள்

பரிசுத்தம்
பரிசுத்தம் என்றால் என்ன? ஒரு பொருளையோ, ஒரு நபரையோ, பொதுவான பயன்பாட்டிலிருந்து தெய்வீக பயன்பாட்டிற்கு மாற்றி வைப்பதே பரிசுத்தம் எனப்படும்.
(எ.கா.) 1. பரிசுத்த ஆலயம் 2. பரிசுத்த வேதாகமம் 3. பரிசுத்தவான்கள்
நம் தேவன் பரிசுத்தர். ஆகையால் நாமும் தேவனுக்கேற்ற பரிசுத்தராயிருக்க வேண்டும். குடும்பத்தில், நண்பர்களிடம், உறவினர்களின் முன் நம்முடைய பரிசுத்த வாழ்க்கையைக் காத்துக்கொள்வது அவசியம். லேவியராகமத்தின் முழு சாராம்சம் – பரிசுத்தம் பன்றி இறைச்சி, இரத்தம் – சாப்பிடுதல் கூடாது.

பலிகள் : 5 வகையான பலிகள் உண்டு.
1. சர்வாங்க தகனபலி
2. போஜன பலி
3. சமாதான பலி
4. பாவ நிவாரண பலி
5. குற்ற நிவாரண பலி

1. சர்வாங்க தகன பலி
சர்வ + அங்க + தகன + பலி = நம்மை முழுவதும் தேவனுக்காய் அர்ப்பணித்தல்.
தாழ்மையின் அடையாளம், 2நாளா 29:27 எசேக்கியா சர்வாங்க தகனபலியைச் செலுத்தினார். தினமும் அதிகாலை எழுந்து நம்மை நாமே சர்வாங்க தகனபலியாய் ஒப்புக் கொடுக்கவேண்டும். நம் அவயவங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். (லேவி 1:3)

2. போஜன பலி
இதன் மறுபெயர் இரத்தமில்லாத பலி. இது போஜனம் சம்பந்தமானது. இரத்தமில்லாதது. போஜன பலியில் இருக்க வேண்டியவை
1. மெல்லிய மாவு 2. எண்ணெய் 3. தூபவர்க்கம் போஜனபலியில் இருக்கக் கூடாதவை புளித்த மாவு, தேன். முதற்பலன் பண்டிகை எல்லாம் போஜனபலியைச் சார்ந்தது.
புதிய ஏற்பாடு புத்தகத்தில் சாப்பிடக் கூடாதவை அப் 15:20ன்படி இரத்தம், விக்கிரகங்களுக்குப் படைத்தது. நெருங்குண்டு செத்தது போன்றவை சாப்பிடக் கூடாதவை.

காயீனின் பலி : இரத்தமில்லாத பலி, போஜன பலி, காய் கனிகள். பழைய ஏற்பாட்டில் சாப்பாட்டில் பிரச்சனை ஏற்படுத்தியவள் ஏவாள் – புதிய ஏற்பாடு (அப் 6:1) ஸ்தோத்திரத்துடன் போஜனத்தைப் புசிக்க வேண்டும்.

போஜனத்தினால் பரிசுத்தத்தை இழந்தவர்கள் 1. சிம்சோன் 2. ஏசா 3. யோனத்தான் 4. தாவீது (நாபாலிடம் சண்டையிட்டான் ) போஜனப் பிரியனாயிருக்கக்கூடாது.

3. சமாதான பலி
இது ஸ்தோத்திர பலி என்றும் சொல்லப்படுகிறது. (லேவி 3:1 ) அநேக ஸ்தோத்திரத்தினால் கிருபை பெருகும். சமாதானம் பெருகும். தேவனோடு நம்மைச் சேர்க்கிறது. சங் 50:23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் தேவனை மகிமைப்படுத்துகிறான்.

4. பாவ நிவாரண பலி : பாவங்களை நிவர்த்தி செய்யும் பலி
பாவம் -தேவ கட்டளைகளை மீறுவதே பாவம் விசுவாசத்தில் வராத யாவும் பாவம். பாவங்கள் நிவர்த்தி செய்யும்படி செலுத்துவது பாவ நிவாரணப்பலி ஆகும். மனிதர் சராசரியாக 1 நாளைக்கு 500 பாவங்கள் வீதம் 30 நாளைக்கு 15000 பாவங்கள் செய்கிறோம். இதை உணர்ந்தவர்களாய் நாம் தேவனிடத்தில் ஒப்புரவாகி மன்னிப்புக் கேட்டு திருந்தி வாழவேண்டும்.
பாவங்களின் வகைகள்
1. மன்னிக்கப்படுகிற பாவம்
2. தண்டனையுடன் மன்னிக்கப்படுகிற பாவம்
3. மன்னிக்கப்படாத பாவம் ( 1 யோவான் 5:16,17 )

கர்த்தருடைய 7 கண்களும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. கர்த்தர் நம்மை ஏழு கோணங்களில் பார்க்கிறார். நாம் செய்யும் பாவங்கள் ஞாபக புத்தகத்தில் எழுதப்படும். பாவத்தின் சம்பளம் மரணம். தன் பாவத்தை
மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்.

5. குற்ற நிவாரண பலி
கட்டளைகளை மீறுவது பாவம், தெரியாமல் செய்வது குற்றம் எனப்படும். நாம் யாருக்காவது தெரியாமல் (அவர்களுக்கு எதிராக ) குற்றம் செய்தால் கட்டாயம் அதை சரி செய்துவிட வேண்டும். பலி செலுத்தினால் மட்டும் போதாது, நிவாரணம் கொடுக்கப்பட வேண்டும்.
(எ.கா.) 1. அறியாமல் செய்வது, 2. தீட்டுபட்டது 3. தகாதவைகளை பேசுவது, 4. ஆணையிடுவது 5. பொய்யாணையிடுவது 6. பொருத்தனை பண்ணி செய்யாமல் இருப்பது – இவைகளெல்லாம் குற்றம்.
சகேயு – குற்றத்தை உணர்ந்து, நாலத்தனையாய் திரும்பக் கொடுத்தான்.

பண்டிகைகள்
7 வகையான பண்டிகைகள் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
1. பஸ்கா பண்டிகை
2. புளிப்பில்லாத அப்ப பண்டிகை
3. முதற்பலன் பண்டிகை
4. பெந்தேகோஸ்தே பண்டிகை
5. எக்காள பண்டிகை
6. பிராயச்சித்த பண்டிகை
7. கூடாரப் பண்டிகை

1. பஸ்கா பண்டிகை : லேவியராகமம் 23:5 எபிரேய மொழியில் பஸ்கா என்பது பெசாக். இதன் பொருள் `கடந்து செல்லுதல்’ (Pass over) ஆகும். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலரை விடுதலை செய்யும் பண்டிகையாகக் குறிக்கிறது. நமது `பஸ்கா’ ஆட்டுக்குட்டியாகப் பலியான இயேசுக்கிறிஸ்துவினால் (1கொரி 5:7,8; 1பேதுரு 1 : 18,19) பாவத்திலிருந்து விடுதலையானதை அடிக்கடி நினைவு கூறவேண்டும்.

நிசான் மாதம் அல்லது ஆபீப் மாதம் 15ஆம் தேதி (டிச) ஏப்ரல் 15ஆம் நாள் துவங்கி 8 நாள் நடைபெறும். பஸ்காவின் அடையாளம் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம்.

இதை எப்படி அனுசரிக்க வேண்டும்?
யாத் 12:5-11ன்படி பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியை (அது செம்மறி ஆடாகவோ அல்லது வெள்ளாடாகவோ, ஒரு வயது கொண்டதும்) தெரிந்துகொண்டு, அதை அடித்து, மாமிசத்தை நெருப்பினால் சுட்டு புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும், அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும் கைகளில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய் புசிக்க வேண்டும். அது கர்த்தருடைய பஸ்கா.

பஸ்கா பண்டிகையின் விளக்கம்
யாத்திரையின் துவக்கம் (யாத்திராகமம் 12:2) இஸ்ரவேலருக்கு ஒரு காலண்டர் ஆரம்பமானது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம். அப்படியே நாம் மறுபடியும் பிறக்கும்போது எல்லாம் புதிதாகிறது.
புதிய துவக்கத்தை மேற்கொள்கிறோம். (2கொரிந்தியர் 5:17)

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி (யாத்திராகமம் 12:3)
இந்த ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது. 1கொரிந்தியர் 5:7 – நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டி. அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும். 1 பேதுரு 1:18,19 – “நீங்கள் ஆசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல் குற்றமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்கள் என்று அறிந்திருக்கிறீர்களே” கிறிஸ்து தூய்மையானவர், கறை திரையற்றவர், குற்றமற்றவர், பழுதற்ற ஆட்டுக்குட்டி, உலகத்தின் பாவத்தை சுமர்ந்து தீர்க்கும் தேவாட்டுக்குட்டியானவருக்கு நிழலாட்டமாய் இருக்கிறது. இளமையான ஆட்டுக்குட்டி குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. நாமும் தாழ்மையுள்ளவர்களாய் இருக்கவேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.

ஆட்டுக்குட்டியின் இரத்தம் (யாத்திராகமம் 12:5,7) இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் சிந்தப்படாவிட்டால் எந்த மனுஷனும் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட முடியாது.

எபிரேயர் 9:22 – “இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை”. அந்த இரத்தம் பூசப்பட வேண்டும். அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து ஒரு ஈசோப்புத் தண்டில் வீட்டின் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும். (யாத்திராகமம் 12:6,7,21,22)

முறிக்கப்படா எலும்புகள் (யாத்திராகமம் 12:46)
ஒரு ஆடு கட்டுப்படாமல் அலைந்து திரிகிறதாய் இருந்தால், அதை அடங்கியிருக்கும் பொருட்டு மேய்ப்பன் எலும்புகளில் ஒன்றை முறிப்பதுண்டு. ஆனால் இயேசுவின் எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படவில்லை.

தீவிரமாய் புசித்தல் (யாத்திராகமம் 12:8,11)
யோவான் 6:53-55 – “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தை புசியாமலும் அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவன் இல்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது”. மாம்சத்தைப் புசிப்பது என்பது – வேத வசனத்தை தியானிப்பதற்கு அடையாளம் ஆகும். (சங்கீதம் 1, லேவியராகமம் 11:3).

கட்டப்பட்ட அரைகள்
இரட்சிக்கப்பட்ட பின் உலகத்தை பின்னே தள்ளி கிறிஸ்துவுக்குள் முன்னேற வேண்டும்.

இரத்தத்தால் அடையாளம் (யாத்திராகமம் 12:12,13) “அந்த இரத்தத்தை நான் கண்டு உங்களைக் கடந்து போவேன்” பஸ்கா பண்டிகை கிறிஸ்துவின் மரணத்துக்கும் அடக்கத்துக்கும் நிழலாட்டமானது. இயேசு கிறிஸ்துவின்
சிந்தப்பட்ட இரத்தத்தை விசுவாசிப்பதன் மூலம் நாம் இரட்சிக்கப்படுகிறோம். மறுபடியும் பிறக்கிறோம். பஸ்கா பண்டிகையை தனிப்பட்ட வாழ்க்கையில் அனுபவிக்கலாம். 1பேதுரு 1:18, 19; எபேசியர் 1:7; 1 யோவான் 1:7; ரோமர் 5:9; 1கொரிந்தியர் 6:19,20.

2. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை : லேவியராகமம் 23:6
புளிப்பு என்பது பாவத்தைக் குறிக்கிறது. (1கொரி 5:6-8; கலா 5:7-9) புளிப்பில்லா அப்பப் பண்டிகை பரிசுத்த வாழ்க்கையையும் இஸ்ரவேலர் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து உடனடியாக எகிப்தைவிட்டு வெளியேறியதால் மாவு
புளிக்காமல் இருந்ததைக் காட்டும் வகையில் கீழ்ப்படிதலையும் குறிக்கிறது. `புளிப்பு’ என்பது மேன்மை பாராட்டுதல், துர்க்குணம், பொல்லாப்பு = என்ற பொல்லாத குணங்கள் ஆகும்.

துர்க்குணம் – துன்மார்க்கம் + குணம்
பொல்லாப்பு – பொல்லாத + ஆப்பு

புளிப்பில்லாத வாழ்வு’ – இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த வாழ்வைக் குறிக்கிறது. அதுபோல் நாமும் துப்புரவு, உண்மை என்றும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகை ஆசரிக்கக் கடவோம். ஆமென்! ஆமென்!

3. முதற்பலன்களின் பண்டிகை : லேவியராகமம் 23:10
இப்பண்டிகையின் போது இஸ்ரவேலர் தங்கள் விளைச்சலின் முதற்பலனைக் காணிக்கையாக செலுத்த வேண்டும். முதற்பலன் மிகச் சிறந்தது. அது கர்த்தருக்குரியது. எல்லாவற்றிலும் முதல் கனியை, முதல் மணிநேரம், முதல் நாள், முதல் சம்பளம் – எல்லாவற்றையும் தேவனுக்கென்று கொடுக்க வேண்டும். (மத் 6:33) முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தை அவருடைய நீதியைத் தேட வேண்டும். இப்பண்டிகை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அவருடையவர்களின் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறதென்று கருதப்படுகிறது. (1 கொரி 15:23; 1 தெச :13,17; வெளி 20:4-6)

4. பெந்தேகோஸ்தே பண்டிகை
பெந்தேகோஸ்தே என்றால் 50வது நாள், முதற்பலன்களை தேவனுக்குப் படைக்கும் நாளிலிருந்து 50 நாள், இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 7×7=49 ஏழு வாரங்கள் = 49 நாட்கள் கடந்து 50வது நாள், இயேசு
பரமேறுமுன் 40 நாள் தேவனுடைய ராஜ்ஜியத்துக் குரியவைகளை அப்போஸ்தலர்களுக்கு தெளிவாய் போதித்தார். பின்பு பெந்தேகோஸ்தே நாளில் ஆவியானவர் ஊற்றப்பட்டு, ஆத்துமாக்கள் 3000, 5000, திரள்கூட்ட ஜனம்
இரட்சிக்கப்பட்டனர். பெந்தேகோஸ்தே பண்டிகை என்பது அறுவடையின் பண்டிகை ஆகும். நாம் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் கிறிஸ்துவை தீவிரமாய் பின்பற்றுபவர்கள். ஆமென் – இதுவே “பெந்தேகோஸ்தே பண்டிகை” ஆகும்.

5. எக்காள பண்டிகை : லேவியராகமம் 23:24
முதலாம் எக்காளம் கானான் தேசத்தையும், கடைசி எக்காளம் பரலோகத்தையும் ஞாபகப்படுத்துகிறது. ( வெளி 19:9) எக்காள பண்டிகை இஸ்ரயேலரைத் தேவன் கானான் நாட்டில் சேர்த்ததைக் குறிக்கிறது. புது வருட ஆராதனை என்றும் சொல்லலாம். ஆட்டுக்குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் – மணவாட்டியாய் மாறவேண்டும். தேவனுடைய எக்காள சத்தத்தை நாம் கேட்க வேண்டும். எக்காளம் ஊதும் செயல் : 1. துதி, 2. கிறிஸ்துவின் நற்செய்தியை உலகெங்கும் அறிவிப்தன் முன் அடையாளம்.

6. பிராயச்சித்தப் பண்டிகை : லேவியராகமம் 16:10
பலிகடா – ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காய், ( பாவமற்ற குற்மற்றவராய் ) பலியானார். குற்றமற்ற ஒருவர்தான் குற்றம் செய்தவனுக்கு ஜாமீன் வழங்க முடியும். அதுபோலவே பாவிகளாகிய நமக்காய் பாவமற் இயேசு கிறிஸ்து பிராயச்சித்தம் செய்தார். இதை நினைவு கூறுதலாகக் கொண்டாடப்படும் பண்டிகைதான் இப்பண்டிகை. ஆமென்.

7. கூடாரப் பண்டிகை
இஸ்ரவேலர் தேவன் செய்த நன்மைகளை நினைத்து நன்றிகூறும் விதமாக, நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை. வனாந்திரத்தில் கூடாரங்களில் தங்கினதை நினைத்து கொண்டாடப்பட்ட பண்டிகை.
அரேபியர்கள் இன்றைக்கும் கூடாரங்களில்தான் தங்குகிறார்கள். பூமிக்குரிய கூடாரமாகிய நம் சரீரத்தில் நாம் கொஞ்சகாலம் தங்கி, அழியாத கூடாரமாகிய நித்திய வீடு பரலோகத்தில் உண்டு என்று எழுதப்பட்டுள்ளது. (2கொரி 5:1; யோவான் 14:2) ஆகவே நித்திய கூடாரத்தை நினைத்து நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம். ஆமென்! ஆயத்தப்படுவோம்.

லேவியராகமமும் – எபிரெயரும்

பண்டிகைஆவிக்குரிய அர்த்தங்கள்
1. பஸ்கா பண்டிகைஇரட்சிப்பு பெறுதல்
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகைபரிசுத்த வாழ்க்கை
3. முதற்பலன்களின் பண்டிகைஆவியின் கனி நிறைந்த வாழ்க்கை
4. பெந்தகோஸ்தே பண்டிகைஆவியின் அபிஷேகம் பெறுதல்
5. எக்காளம் ஊதும் பண்டிகைநற்செய்தி அறிவித்தல்
6. பாவ நிவாரண பண்டிகைபரிந்து பேசும் ஜெப ஊழியம்
7. கூடாரப் பண்டிகைஇரகசிய வருகையில் கர்த்தரோடு சேருதல்

லேவியராகமத்தில் எழுதப்பட்ட 3 விதமான ஆராதனைகள்
1. ஆரோனிய ஆராதனை
2. அன்னிய ஆராதனை
3. ஆசரிப்பு கூடார ஆராதனை

1. ஆரோனிய ஆராதனை
கர்த்தருக்கு பண்டிகை என்று பெயரிட்டு, பொன் கன்றுக்குட்டியை உருவாக்கி ஜனங்கள் புசிக்கவும், குடிக்கவும் உட்கார்ந்து விளையாடவும் எழுந்தார்கள். கற்பனைகளில் 1, 2, 3, 7, 10 ஆகியவற்றை மீறினார்கள்.
`என் மகிமையை வேறொருவருக்கும் கொடேன்’ என்று தேவன் சொல்லியிருக்க, அழிவில்லாத தேவமகிமையை பொன் கன்றுக்குட்டிக்கு கொடுத்து, தேவனை வெறுக்கும்படி செய்தனர் – இப்பேர்ப்பட்ட ஆராதனைகள் மாற்றப்பட வேண்டும். தேவனுக்குரிய மகிமையை தேவனுக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.

2. அன்னிய ஆராதனை : லேவியராகமம் 10:1-3
கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை, ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் தேவ சந்நிதியில் கொண்டு வந்தார்கள்.
ஆலயத்தில் உள்ள பரிசுத்த அக்கினியைத் தவிர வேறே அக்கினியைக் கொண்டு வந்தனர்.
தவறான நேரத்தில் தவறான இடத்தில் தூபம் காட்டினர்.
தேவனை பரிசுத்தம் பண்ணத் தவறினர்.
குடிபோதையில் ஊழியத்திற்கு வந்தனர். பரிசுத்த சிரிப்பு, வாந்தி, ஊளையிடுதல், விசிலடித்தல் போன்றவை கூடாது. சகலமும் நல்லொழுக்கமாகவும், பரிசுத்தத்தோடும், கிரமமாகவும் செய்யப்படக்கடவது. ஆமென். 1 கொரி 14:40. எண். 3:4, எண் 26:61 – அந்நிய அக்கினியைக் கொண்டு வந்ததால் நாதாபும், அபியூவும் மரித்துப் போனார்கள். இப்படிப்பட்ட ஆராதனை செய்யக்கூடாது.

3. ஆசாரிப்புக் கூடார ஆராதனை
மோசேயின் தலைமையில், ஆரோனின் மேற்பார்வையில் பிரதான ஆசாரியரின் பிள்ளைகள் மூலம் நடத்தப்பட்ட, பரிசுத்த ஆராதனை லேவியர்கள் கிருபாசனப் பெட்டியை (or) உடன்படிக்கைப் பெட்டியை சுமக்க வேண்டும்.
ஆரோனும் அவரது குமாரர்களும் ஆட்டுக்கடா ஒன்றைக் கொண்டுவந்து அதனுடைய தலையின்மேல் இவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை வைத்து, அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தை பலிபீடத்தின் மேல் சுற்றிலும்
தெளித்து? கடாவை சந்து சந்தாகத் துண்டித்து – ஒரு பரிசுத்தமான ஆராதனை நடத்தும்போது (யாத் 29:15, 16, 17) தேவ மகிமை வந்து தங்கும். ஆமென். அல்லேலூயா!
முறையான ஆராதனை நடத்தாதபோது பறவைகள் ( பிசாசு ) தான் பறக்கும். தேவ மகிமை வெளிப்படாது. ஆமென்.

லேவியராகமம் கற்றுக் கொடுப்பது
1. இரத்தத்தைப் புசிக்கக்கூடாது.
2. நெருங்கின உறவினர்களை திருமணம் செய்யக்கூடது. (லேவி 19)
3. கழிப்பறை வசதி இருக்க வேண்டும்.
4. நாம் எப்பொழுதும் பரிசுத்தமாய் வாழ வேண்டும். (11:45)
5. அசுத்தமானதை சாப்பிடக் கூடாது.
6. சுத்த மனதோடு தேவனை தொழுது கொள்ளவேண்டும்.
7. ஏழைகளை ஒடுக்கக்கூடாது.
8. கூலிக்காரனுடைய கூலியை உடனே கொடுக்க வேண்டும். (19:13)
9. பச்சை குத்தக்கூடாது. (19:28)
10. நவீன தலைமுடி கத்தரித்தல் கூடாது. (19:27)
11. பரிசுத்த ஓய்வுநாளை ஆசரிக்கத் தவறக்கூடாது. (23:3)
12. தசமபாகம் காணிக்கைகளில் உண்மையாய் இருக்க வேண்டும். (27:30)

எண்ணாகமம்

இருமுறை இஸ்ரவேலரின் தொகை எண்ணப்பட்டதால் இப்புத்தகம் எண்ணாகமம் என்றழைக்கப்படுகிறது. சரித்திரம் பாதி பிரமாணங்கள் மீதி என்பதே இப்புத்தகத்தின் சிறப்பு.

நோக்கம்
கானான் தேசத்தைக் கைப்பற்ற ஆயத்தம் செய்ததையும், அவிசுவாசத்தால் வாய்ப்பை இழந்து 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் அலைந்ததையும், வனாந்திர வாழ்வை எவ்வாறு கையாள்வது – பற்றியும் இப்புத்தகம் உணர்த்துகிறது.

முதல் கணக்கெடுப்பு சீனாய் மலையில் அருகில் எடுக்கப்பட்டது. இரண்டாவது கணக்கெடுப்பு மோவாய்
சமவெளியில் எடுக்கப்பட்டது. இது சங்கியாப்புத்தகம் என்று மலையாளத்தில் அழைக்கப்படுகிறது.

எண்ணாகமத்தை எழுதியவர் : மோசே
எழுதப்பட்ட காலம் : 1406
அதிகாரம் : 36
வசனம் : 1288

எண்ணாகமம் நமக்கு உணர்த்துவது
1. தேவனுடைய திட்டத்தைவிட்டு வழிவிலகும்போது தண்டனை உண்டு. (பிலேயாம்)

2. கிறிஸ்துவ வாழ்வில் பாடுகள் இன்றி பரலோகம் இல்லை என உணர்த்தும் புத்தகம்.

3. கர்த்தருக்கு விரோதமான முறுமுறுப்பு இருக்கக்கூடாது.

எண்ணாகமப் புத்தகம் பற்றிய கண்ணோட்டம்
1. இருமுறை கணக்கெடுப்பு : ஒரு தொழிலை, ஊழியத்தை வாழ்க்கைப் பாதையைத் தெரிந்து கொள்ளுமுன் இருமுறையாவது கணக்குப் பார்த்து திட்டமிடுவது அவசியம். ( லூக்கா 14:28,33)

2. உணவுக்காக, இறைச்சிக்காக – ஒரு கலகம் அதிகாரம் 11.

3. ஆரோன், மிரியாம் – போன்றவர்களின் கலகம் அதிகாரம் 12.

4. 10 பேரின் அவிசுவாசத்தால் வந்த கலகம் அதிகாரம் 13 (வேவு பார்க்கச் சென்றவர்கள் )

5. கோராகின் புத்திரர்களின் கலகம் அதிகாரம் 16.

6. மோசேயின் கலகம், அதிகாரம் 20:1-13 (மோசேயின்பாவம்)

7. ஆரோனின் மரணம். அதிகரம் 20.

8. இஸ்ரவேலரின் கலகம். அதிகாரம் 21.

9. பிலேயாமின் தந்திரம் (டிச) கலகம் அதிகாரம் 22.

10. துர்ச்செய்தி பரப்பியவர்களின் அழிவும் நற்செய்தி சொன்னவர்களின் ஆசீர்வாதமும். எண்ணாகமம் 14, 15 அதிகாரங்கள்.

எப்போதும் விசுவாச வார்த்தைகளையே பேச வேண்டும். அவிசுவாச, துர்ச்செய்திகளைப் பரப்புதல் கூடாது.

இஸ்ரவேலர் 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தார்கள். அதில் சீனாய் மலையடிவாரம் – 20 நாட்களும், வனாந்திரம் 38 ஆண்டுகள், மோவாப் சமவெளி 5 மாதமளவும் சுற்றித் திரிந்தார்கள்.

மூன்றுவித ஆவிகள், 3 வித பாவங்கள் (வெளி 2:14)
1. பிலேயாம் – விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை புசித்தல்.

2. யேசேபேல் – அநாகரிகமாக உடை உடுத்துதல் (அலங்காரம்)

3. வேசித்தன ஆவி – பாலியல் பாவங்கள்

30 லட்சம் பேர் 40 ஆண்டுகள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்தனர். அதில் 2 பேர் மட்டுமே கானானுக்குள் சென்றனர். மற்றவர்கள் வனாந்திரத்திலே மாண்டு போனார். மோசே முதலாய் கானானுக்குள் செல்லவில்லை. முடிவு
பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான். ஆமென்! ஆமென்!

முறுமுறுப்புகளும் அதன் விளைவுகளும்
எண்ணாகமத்தின் புத்தகத்தில் முறுமுறுத்த, முறையிட்ட 7 சம்பவங்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றிற்கும் தேவன் நியாயத்தீர்ப்பு செய்தார்.

பிலி 2:14-16 நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாய் இருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

1.கடின சூழ்நிலை குறித்த முறுமுறுப்பு (எண் 11:1-3) கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளையத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது. (11:1)

2. உணவை குறித்த முறுமுறுப்பு (இறைச்சி) (எண் 11:4-5) கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். (1:33)

3. மோசேயின் தலைமைத்துவம் குறித்த முறுமுறுப்பு (எண் 12) மிரியாம் ஒரு வாரம் குஷ்டம் பிடித்தவளானாள் (12:1-15)

4. வாக்களிக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் பிரவேசிப்பதை குறித்த முறுமுறுப்பு (எண் 14-14)
புதிய தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்திற்கு திரும்பிப் போக தீர்மானித்தார்கள். (14:4)
அவர்கள் விரும்பினதை தேவன் அவர்களுக்குக் கொடுத்தார். அடுத்த 40 ஆண்டுகள் வனாந்தரத்திலேயே சுற்றிவந்து இறுதியில் மடிந்து போனார்கள். (14:34-35)

5. மோசே, ஆரோன் ஆகியோரின் தலைமைத்துவம் குறித்த முறுமுறுப்பு (எண் 16)
கோராகு கூட்டத்தைக் கூட்டி விரோதமாய் எழும்பினான்.
அவனும் அவனது கூட்டமும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள். (16:1-33)

6. தண்ணீருக்காக முறுமுறுப்பு (எண் 20:1-13) இறுதியில் தேவன் சொன்னதை செய்யாமல் மோசே கன்மலையை இரண்டுமுறை அடித்ததால் அவன் வாக்களிப்பின் நிலத்திற்குள் பிரவேசிப்பதை தேவன்
தடைசெய்தார். (20:1-13)

7. அப்பத்திற்காகவும், தண்ணீருக்காகவும் முறுமுறுப்பு (21:4-9)
கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார். அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.

கன்மலையை அடித்தவர் கழுதையை அடித்தவர்

கன்மலையை அடித்தவர் கழுதையை அடித்தவர்
1. மோசே (எண் 20:11) 1. பிலேயாம் (எண் 22:27)
2. தீர்க்கதரிசி 2. தீர்க்கதரிசி
3. தாகம் தீர்க்க அடித்தார் 3. கோபம் தீர்க்க அடித்தார்
4. கர்த்தர் பேசினார் 4. கழுதை பேசிற்று
5. விசுவாசம் இல்லை 5. பண ஆசை
6. பேசவேண்டிய இடத்தில் அடித்தார் 6. போகக்கூடாத இடத்திற்கு செல்லும்போது அடித்தார்
7. முடிவு : கானானுக்குள் செல்லவில்லை 7. முடிவு : கானானை காணவும் முடியவில்லை.

எண்ணாகமத்தின் ஏழு ஆசீர்வாதங்கள் (எண் 6:24-26)
1. கர்த்தருடைய ஆசீர்வாதம் (வேதனை இல்லாதது. எல்லா நலன்களையும் உள்ளடக்கியது )
2. கர்த்தரின் பாதுகாப்பு
3. ஆவிக்குரிய வெளிச்சம் நம்வாழ்வில் உண்டாகும்.
4. கர்த்தருடைய கிருபை கிடைக்கும்.
5. வழிகளில் கூட இருந்து காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
6. கர்த்தரின் சமாதானம் கிடைக்கும்.
7. தேவபிரசன்னம் வாழ்க்கை முழுவதும் மூடி நம்மைப் பாதுகாக்கும்.

 

உபாகமம்

பெயர் விளக்கம்
1. திரும்ப எழுதுதல்
2. கிரேக்க மொழியில் -Deuteronomion என்றால் திரும்பவும் சட்டம் சொல்லப்படுதல்.
3. மலையாள மொழியில் – ஆவர்த்தனம் என்றும் சொல்லப்படுகிறது.

தேவன் இஸ்ரவேலருக்குச் செய்தவற்றை, சொன்னவற்றை அவர்கள் நினைவு கூறச்செய்யவும், மீண்டும் தேவனுக்கென்று தங்களை அர்ப்பணிக்கவும் எழுதப்பட்டது.

எழுதியவர் : மோசேயும், மோசேயின் மரணம் போன்ற நிகழ்வுகளை யோசுவாவும் சேர்த்தெழுதினார். (யோசுவா 26:24)
எழுதப்பட்ட காலம் : 1406

எழுதப்பட்டதின் நோக்கம்
1. தேவன் எழுதிக்கொடுத்த சட்டத்திட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்போது மட்டுமே ஆசீர்வாதம். கைக்கொண்டு நடவாத பட்சத்தில் அது பாவமாகும். பாவம், சாபத்தைக் கொண்டுவரும் என்பதை விளக்கும் புத்தகம்.
2. தேவனைவிட வேறு யாரையும் வணங்குதல் கூடாது.
3. திரும்ப திரும்ப எழுதப்பட்டதால், யாருக்காவது உணர்த்தப்பட்டு, மனந்திரும்ப வாய்ப்பு கொடுக்கும்படி எழுதப்பட்ட புத்தகம்.

மோசேயின் உரைகள்
முன்னுரை (1:1-5)
மோசேயின் முதல் உரை இஸ்ரவேலரின் சமீபகால வரலாற்றை நினைவுபடுத்துதல் (1:6-4:43)
1. சீனாய் மலையை விட்டுப் புறப்படுதல் (1:6-18)
2. காதேஸ் பர்னேயாவில் அவிசுவாசம் (1:19-46)
3. வனாந்திரத்தில் அலைந்து திரிதல் (2:1-15)
4. மோவாப் சமபூமிக்கு நேராக முன்னேறுதல் (2:16- 3:29)
5. கீழ்ப்படியும்படி மோசே அளித்த புத்திமதி (4:1-43)

மோசேயின் இரண்டாம் உரை : உடன்படிக்கையின் முக்கிய உத்தரவாதங்கள் (4:44-26:19)
1. பத்துக்கற்பனைகள் (4:44-5:33)
2. கட்டாயக் கட்டளைகள் (6:1-25)
3. நடைமுறை வாழ்வுக்கான கட்டளைகள், வாக்குறுதிகள், எச்சரிக்கைகள் (7:1-11:32)
4. வழிபாடு சம்பந்தப்படட் கட்டளைகள் (12:1-32)
5. கள்ளத்தீர்க்கதரிசிகள் குறித்த கட்டளைகள் (13:1-18)
6. ஆகாரம் பற்றியவை தசபாகம், ஏழாம் வருஷம் பற்றிய கட்டளைகள் (14:1-15:23)
7. வருடாந்திரப் பண்டிகைகள் குறித்த கட்டளைகள் (16:1- 17)
8. தலைவர்களைப் பற்றிய கட்டளைகள் (16:18-18:22)
9. தேசம், சமுதாயம் பற்றிய கட்டளைகள் (19:1-26:19)

மோசேயின் மூன்றாம் உரை : உடன்படிக்கையை நியாயப்படுத்தலும், புதுப்பித்தலும் (27:1-30:20)
1. மோசே அமைதியாக இஸ்ரவேலைக் குற்றப் படுத்துதல் (27:1-26)
2. கீழ்ப்படிதலுக்கு ஆசீர்வாதங்களும், கீழ்ப்படியாமைக்குச் சாபங்களும் வாக்களிக்கப்படுதல். (28:1-68)
3. முக்கியமான உபதேசங்களையும் உடன்படிக்கையையும் மறுபடியும் எடுத்துக் கூறுதல். (29:1-30:20)

மோசேயின் இறுதி உரையும், அவனுடைய மரணமும் (31:1- 34:12)
1. மோசே இஸ்ரவேலரைக் குற்றஞ்சாட்டி, யோசுவாவைத் தலைவனாக நியமனம் செய்தல். (31:1-29)
2. மோசேயின் பாட்டு. (31:30-32:47)
3. தேவன் மோசேக்குக் கொடுத்த அறிவுரை. (32:48 – 52)
4. மோசே கோத்திரங்களை ஆசீர்வதித்தல். (33:1-29)
5. மோசேயின் மரணம், அடக்கம், இறுதி உரை (34:1-12)

4. மோசேயின் வாழ்க்கையோடு தொடர்புடைய 3 முக்கிய மலைகள்
ஓரேப் மலை – ஜனத்தை வழிநடத்தும்படி அழைக்கப்பட்டான்.
சீனாய் மலை- பிரமாணங்களைப் பெற்றுக் கொண்டான்.
பிஸ்கா மலை – கானானைப் பார்வையிட்டான்.

மோசே கிறிஸ்துவோடு மறுரூப மலையில் மகிமையோடு காணப்பட்டார். ஏபேல், ஓசா என்ற மலைதான் மோசே மரித்த இடம் என்று இஸ்லாமியர் சாதிக்கிறார்கள்.
இதன்மேல் ஒரு மசூதியையும் கட்டி தொழுகை செய்கின்றனர்.

வேதத்தில் உள்ள தேவ தாசர்களில் மோசே முதல் இடம் பெறுகிறான். வாலிப வயதில் தேவனைத் தெரிந்துகொண்டு 80 வருடங்கள் குயவன் கை மண்பாண்டமாக தேவகரத்தில் அமைந்தான். இஸ்ரவேலுக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் வாய்க்காலாக அமைய பயிற்சி தேவைப்பட்டது. இவன் கிறிஸ்துவுக்கு முன் அடையாளமானவன்.

குழந்தைப் பருவத்தில் பொல்லாத அரசனின் கைக்குத் தப்பினான்.

தேவதிட்டத்தை நிறைவேற்றும்படி மகிமையைத் துறந்தான்.

அமைதியான இடைக்காலத்தில் பயிற்சி பெற்றான்.

எல்லா மனுஷரினும் சாந்தமானவன்.

தன் வேலையை முடித்து ஜனத்தை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் கொண்டுவந்து சேர்த்தான்.

பரிந்துபேசும் ஊழியம் செய்தான்.

மறுரூபம் அடையும் அளவிற்கு தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்தான்.

கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப் போல் ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை (34:12). மோசே தீர்க்கதரிசி மாத்திரமல்ல, பிரமாணத்தைக் கொடுத்தவனும், ஆளுகை செய்வதில் வல்லவனுமாய் இருந்தான். இவனுடைய சாந்தம் தேவனிடத்தில் சாட்சியைப் பெற்றது. (எண். 12:3) தேவன் தான் சர்வ வல்லவர், தான் அவரால் உபயோகிக்கப்படும் ஓர் கருவி மாத்திரமே என்று உணர்ந்துகொண்ட மனிதன் மோசே. ஒருசில பலவீனங்கள் மோசேயின் இடத்தில் காணப்பட்டாலும் கூட விசுவாசத்திலும் உண்மையான ஊழியத்திலும் மோசே தலைசிறந்தவன் என்பதில் ஐயமில்லை.

உபாகமமும் ஊழியமும் ( உபா 1:29-33)
ஒருவன் ஊழியம் செய்யும்போது தேவனால் உண்டான பாதுகாப்பும், வழிநடத்துதலும், பராமரிப்பும் உண்டாகும் என்பது உபாகம புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
1. ஊழியம் செய்யும்போது தேவனுடைய சமூகம் நமக்கு முன்பாகச் செல்லும். ( வச. 30)
2. ஆத்தும ஆதாயப்பணிக்கு எதிரான ஆவிகளுடன் போராட தேவன் நமக்கு பெலன் தருகிறார். (வச. 30)
3. ஊழியத்தில் கடினமான பாதை வரும்போது தேவன் நம்மை சுமப்பார். (வச. 31)
4. ஊழியத்தில் தேவன் நமக்கு சரியான பாதையைக் காட்டுவார். (வச. 32)
5. ஊழியப் பாதைகளில் நமக்குப் பாதுகாப்பு தருவார்.
6. ஊழியத்தைக் குறித்து பயப்படவோ, கலங்கவோ தேவையில்லை. (வச. 33)

தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? உபாகமம் நமக்குக் கற்பிப்பது என்ன? உபாகமம் 10:12, 13
1. தேவனுக்குப் பயந்திருக்க வேண்டும். `தேவனுக்குப் பயந்திருப்பது’ என்பது தீமையை விட்டு விலகுவது. (நீமொ 8:13)
2. அவர் வழிகளில் நடக்கவேண்டும். அவர் வழிகளை அறிந்துகொள்ள, நாம் வேதத்தை வாசித்து? அதை தியானிப்பது மிக மிக அவசியம்.
3. தேவனிடத்தில் முழு இருதயத்தோடும் அன்புகூர வேண்டும்.
4. தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டும்.
5. அவருடைய கட்டளைகளை கைக்கொள்ள வேண்டும். முழுகி ஞானஸ்நானம் எடுத்தல்.
6. பரிசுத்த ஆவிபெற்று, பரிசுத்த வாழ்வு வாழ்தல்.
7. கர்த்தரை மட்டுமே சேவிப்பது. கர்த்தரை மட்டுமே ஆராதிப்பது.
8. நன்மை வரும்படி வாழ்வது.

பஞ்சாகமம் நமக்கு கற்றுக்கொடுத்தவைகளில் ஏதாகிலும் ஒன்று நிச்சயமாய் நம் வாழ்வை மாற்றும். எனவே நாமும் ஆசீர்வதிக்கப்பட்டு மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாறுவோம்.

எல்லா துதியும் கனமும் மகிமையும் தேவனுக்கே
உரியது. ஆமென்.

தொடர்பு : Pr. J.R.. செல்வின் சிங்
யெகோவா ஷம்மா ஊழியங்கள்
பள்ளவிளை, பெருவிளை அஞ்சல்
கன்னியாகுமரி மாவட்டம்
செல் : 94427 11146